இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,120 ஆகவும், கிராமுக்கு ரூ.7,515 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (26.09.2024) 22 கேரட் ஆபரண தங்கம் விலையில் மாற்றமில்லை நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை ஆகிறது. அதன்படி, 1 கிராம் தங்கம் ரூ.7,060 ஆகவும், 1 சவரன் ரூ.56,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,120 ஆகவும், கிராமுக்கு ரூ.7,515 ஆகவும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.101 க்கும், 1 கிலோவுக்கு ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.