(09.02.2024) இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, ஒரு நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கும் அளவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி, உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வோர் முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது.
பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
சென்னையில் (09. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 5,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் 76 ரூபாய், 50 காசுகளுக்கும்,1 கிலோ 76,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
2026 இலக்கு…முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் – புஸ்ஸி ஆனந்த்!
சென்னையில் நேற்றைய தினம் (08. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76, 000-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.