HDFC வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது …!
எச்.டி.எஃப்.சி வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.45 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.60 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 75 லட்ச ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டிலிருந்து 8.70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வட்டி விகிதங்களிலிருந்தும் 5 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்படும். வட்டி விகிதத்தில் மேற்கொண்டுள்ள மாற்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.