இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ் ..! குறைந்தது தங்கம் விலை ..!

Gold Price [file image]

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நாட்களில் உச்சம் தொட்ட நிலையில், இன்றைய நாளில் சற்று குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்ட நிலையில் தற்போது இன்றைய நாளில் சற்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (13-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780-க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89-க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

அதன்படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (12-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து  ரூ.90-க்கும், கிலோவுக்கு ரூ.1500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனையானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்