ஜிஎஸ்டி வரி ஏற்றம் மூலம் மேலும் 1000 கோடி வருமானம் ஈட்ட அரசு ஆலோசனை?!
- உணவு பொருட்கள், ஆடை காலணிகள் இன்னும் சில அத்திவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.
- இந்தாண்டு நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. சென்றாண்டு ஜிஎஸ்டி வசூலானது 97 ஆயிரம் கோடியாக இருந்துவந்துள்ளது.
- தற்போது ஜிஎஸ்டி குறைந்தபட்ச வரி 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி குழு ஆலோசித்து வருகிறதாம்.
இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியானது குறைந்த பட்ச வரியான 5 சதவீதமானது உடைகள், காலணிகள், உணவு பொருட்கள், மேலும் சில அத்யாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரியானது 1 லட்சம் கோடியை தாண்டியது. அதற்கு முன்னர் 3 மாதம் வரை 1 லட்சம் கோடிக்கு குறைவாக தான் ஜிஎஸ்டி வருமானம் வசூலாகி இருந்தது.
நவம்பர் மாதம் திருவிழா அதிகம் உள்ள மாதம் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலானது. இதே போல சென்றாண்டு நவம்பர் மாதம் 97,637 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது.
தற்போது இந்த ஜிஎஸ்டி வருமானத்தை மாதம் மேலும் 1000 கோடிக்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாம். ஆதலால் 5 சதவீத வரியை 6 சதவீதமாக உயர்த்த அரசு பரிசளித்து வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.