இன்ப செய்தி : தங்கம் சவரனுக்கு ரூ.1,096 குறைவு.!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து, ரூ.32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.137 குறைந்து, ரூ.4,020க்கு விற்பனையாகிறது.  அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.45.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.45,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 6ம் தேதி வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இந்த கடும் உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது, மேலும் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து, ரூ.32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்