இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,192-க்கும், கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,524-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.0.70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.