இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ..! குறைந்தது தங்கம் விலை ..எவ்வளவு தெரியுமா ?
Gold Price: கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை இன்றய நாளில் சற்று குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2760 அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதன் படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (05-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நேற்று மாற்றம் அடையாமல் இருந்த வெள்ளியின் விலை தற்போது கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.85-க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் நேற்றைய நிலவரப்படி (04-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,360க்கும், கிராமுக்கு ரூ.6,545க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.85.30-க்கும், கிலோ வெள்ளி ரூ.85,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.