BSNL வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ! 4G சேவை அறிமுகம் !
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ மற்றும் ‘மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்’ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களுக்கு 14ஆயிரம் கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும், மீதமுள்ள 4 ஆயிரம் கோடி ரூபாயினை எம்.டி.என்.எல்.க்கும் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.