குட்நியூஸ்…இனி சில்லறை மற்றும் மொத்த வர்த்தகதாரர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் – மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை எம்.எஸ்.எம்.இ என சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எம்.எஸ்.எம்.இ பிரிவில் இருந்து சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களை மத்திய அரசு நீக்கியது.

இதனால்,எம்.எஸ்.எம்.இ துறைக்கு வழங்கப்படும் கடன்கள் முன்னுரிமைத் துறை கடன்களின் கீழ் வருவதால்,அவை சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களுக்கு மறுக்கப்பட்டது.

மேலும்,வேளாண்மையைத் தவிர, எம்.எஸ்.எம்.இ துறைக்கு வழங்கப்படும் கடன்களும் பி.எஸ்.எல். மொத்த கடனில் 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து,2017 ஆம் ஆண்டில் பறிக்கப்பட்ட சில்லறை மற்றும் மொத்த வர்த்தகங்களுக்கான எம்எஸ்எம்இ நிலையை மீட்டெடுக்குமாறு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) மார்ச் மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (RAI), வர்த்தகர்களுக்கு MSME நிலையை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசிடம் பிரதிநிதித்துவப்படுத்தியது.

இதனால்,மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (எம்.எஸ்.எம்.இ),சில்லறை மற்றும் மொத்த வர்த்தகங்களை எம்.எஸ்.எம்.இ.களாக சேர்ப்பதாக  ஜூலை 2 ம் தேதியான நேற்று , அறிவித்தது.

இதனையடுத்து,ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னுரிமை கடன்கள் வழங்குதல் பயன்களையும், 2.5 கோடி சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று எம்.எஸ்.எம்.இ அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

எனவே,எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில்லறை மற்றும் மொத்த வர்த்தகங்கள் இப்போது உதயம் பதிவு இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

இந்நிலையில்,இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை எம்.எஸ்.எம்.இ என சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இது வர்த்தகர்களில் கோடிக்கணக்கானவர்களுக்கு எளிதாக நிதி, பல்வேறு நன்மைகளைப் பெறவும், அவர்களின் வணிகத்தை அதிகரிக்கவும் உதவும்.மேலும்,வர்த்தகர்களை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்