விண்ணை தொடும் தங்கம் விலை! 28,500-ஐ தாண்டியது!
இன்று பலராலும் விரும்பி வாங்கப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், 22 கேரட் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,568-க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.3,571-க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.47.90-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில், சவரனுக்கு ரூ.2,088 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.