திடீர் உச்சத்தில் தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 53,720ஆக விற்கப்படுகிறது.

சென்னை : கடந்த 4 நாள்களாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,720ஆக விற்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (11.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.91,500க்கு விற்கப்படுகிறது.