சென்னை :கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் அதே விலை நீடிக்கிறது. ஆனால், வெள்ளி விலை சிறுது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (04.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,670க்கும், 1 சவரன் தங்கம் ரூ.53,360க்கும் விற்கப்படுகிறது.
unknown nodetoday gold price [file image]அதே போல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,000 ஆகவும், கிராமுக்கு ரூ.7,125 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராமுக்கு ரூ.90.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
