தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இறங்குமுகத்தில் வெள்ளி விலை…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்துறைகளிலும் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தற்போது தங்கத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4391-க்கும், மேலும் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.35128க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தூய தங்கத்தின் விலை 8 கிராம் 36,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளியின் விலை 1.20 ரூபாய் குறைந்து கிராமுக்கு 41.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.