ரூ.29,000 கீழ் சென்ற தங்கத்தின் விலை !8 நாட்களில் ரூ.1,176 குறைவு
இன்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாயை தொட்டது .இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது.1 சவரன் தங்கம், ரூ. 28,944-க்கு விற்பனையாகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.16 குறைந்து, ரூ.3618-க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,176 குறைந்துள்ளது