கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.36,269 ஆகவும், கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,537 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆஅபரான தங்கத்தின் விலை சவரன் 38,096 ஆகவும், கிராம் ரூ.4,762 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.53.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது.