gold price [File Image]
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் காரணமாக, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
(12.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,280க்கும், கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,410க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.75, 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(11.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976க்கும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,372க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ. 75க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…