எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,840-க்கும், ஒரு கிராம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4 தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. நேற்று ரூ.57,160க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.7,145க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து ரூ.7,225க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,840-க்கும், ஒரு கிராம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம், கடந்த நான்கு னங்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.101க்கு விற்பனை ஆகிறது.