வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400 ஆகவும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளது. மளமளவென உயர்ந்த தங்கம் விலை கடுகளவு குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (28.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400 ஆகவும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது.
கடந்த 24ஆம் தேதி 1 கிராம் ரூ.98க்கும், 1 கிலோ ரூ.98,000க்கும் விற்கப்பட்டது. தற்பொழுது, வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.101 க்கும், 1 கிலோவுக்கு ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.