சற்று குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! ஒரு பவுன் இவ்வளவா.?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31,696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.3,962-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,272-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.43.20 விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. இதற்குமுன் சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.31,472க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31,696-க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025