தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ.4,465க்கு விற்பனை. வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000 ஆக உள்ளது.