வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : தங்கத்தின் விலை இன்று (பிப்.17) மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒருகிராம் ரூ.7,940க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது.
மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோரூ.1,08,000க்கும் விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025