தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,616க்கும், கிராமிற்கு ரூ.30 ஆக உயர்ந்து, ரூ.4,452 க்கு விற்பனை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35616க்கும், கிராமிற்கு ரூ.30ஆக உயர்ந்து, ரூ.4,452 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து ரூ.75.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,300 ஆக உள்ளது.