தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு.!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880-க்கு விற்பனை.
பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. மேலும், தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,700க்கும் விற்பனையாகிறது.