தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296க்கு விற்பனை , மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 காசுகள் உயர்ந்து ரூ.4,912க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 காசு அதிகரித்து 71 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.