கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,667-க்கும், ஒரு சவரன் ரூ. 69,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. ஆனால், இன்று ஒரே நாளில் மீண்டும் உச்சம் கண்டுள்ளது, அதன்படி இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கியது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,945 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. அநேகமாக நாளை விலை ஏற்றம் கண்டால், ரூ.8 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த நான்கு நாட்களாக , கிராமுக்கு ரூ.107.-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,667-க்கும், ஒரு சவரன் ரூ. 69,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.