கடந்த ஒரு வார காலமாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை கடும் ஏற்றம் கண்டு வந்த நிலையில், ஆயுத பூஜை நாளான நேற்று குறைந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.
(24.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,675 க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.78.00க்கும், கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
(23.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,400 க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும் விற்பனையானது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.78.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 78,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…