மாத தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றமில்லை.! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நாளாக தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆபரண தங்கம் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (01-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எந்தவித மாற்றம் இல்லாமல், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.53,480க்கும், கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.6,685க்கும் விற்கப்படுகிறது.
அதே நேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 94.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 94, 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.