ஆறுதல் கொடுத்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கும், ஒரு கிராம் ரூ.7,890க்கும் விற்பனை

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வை கண்ட நிலையில், இப்பொது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.14) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920க்கும், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,990க்கும் விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (பிப்.15) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.7,880-க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,495-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.51,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் இன்று (பிப்ரவரி 15) ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000க்கும் விற்பனை ஆகிறது.
மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. உதாரணமாக, வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது. இதனையடுத்து இப்போது குறைய தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.