Categories: வணிகம்

மாத தொடக்கத்தில் அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை.!

Published by
கெளதம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில்.ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தாண்டியதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் மாத தொடக்க நாளான இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (01. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,880க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கும், கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.77,800க்கும் விற்பனையாகிறது.

ஜனாதிபதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

சென்னையில் நேற்றைய தினம் (31. 01. 2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்று ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

26 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

51 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago