ஏற்றம் கண்ட தங்கம் விலை…கிடுகிடு குறைவு! இன்றைய நிலவரம் இதோ.!
சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240க்கு அதிகரித்து ரூ.44,400க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவர படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224க்கு அதிகரித்து ரூ.44,640க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.