சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14-ஆக உயர்ந்து ரூ.3,876-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.51.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்த்து, நடப்பாண்டு தொடங்கிய சில நாட்களிலேயே, ரூ. 31 ஆயிரம் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதனைத்தொடர்ந்து சற்றே குறைந்த தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.31,008 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.14 அதிகரித்து ரூ.3.876 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. பின்னர் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.51.30 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.51, 300 -க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 31,000-க்கு மேல் தங்கம் விற்கப்படுவதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…