புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை! 29,000-ஐ நெருங்கியது!
தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,896-க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,769-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.30,152-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.48,500-க்கும் விற்பனையாகிறது.