ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றம் அதிரடியாக ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், நேற்று அதிரடியாக ரூ.600 உயர்ந்த நிலையில், இன்றும் ரூ.80 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின்
ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(21.10.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,670க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.70க்கும், கிலோ வெள்ளி ரூ.78,700க்கும் விற்பனையாகிறது.
(20.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 77.50க்கும் கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…