இல்லத்தரசிகள் அப்செட்…ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை!
தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590க்கும், ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.