வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 60,200க்கு என வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
சென்னை : நேற்று (ஜனவரி 21, 2025) அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.59,600 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த விலையை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக விலை உயர்ந்து நகை வாங்கும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றயை நிலவரப்படி (ஜனவரி 22, 2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரன் ரூ.60,00-ஐ எட்டியுள்ளது வரலாறு காணாத வகையில் உயர்ந்தது என்று சொல்லவேண்டும்.
ஏனென்றால், இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 31 -ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.59,640 ஆக விற்பனை ஆகி இருந்தது. இது தான் தங்கம் விலை அதிகமாக உயர்ந்த எண்ணிக்கையாக இருந்தது. தற்போது அதை மிஞ்சும் அளவுக்கு ரூ.60,200க்கு உயர்ந்துள்ளது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,209-க்கும், ஒரு சவரன் ரூ. 65,672-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில், கடந்த 4 நாளாக விற்பனையாகி வந்த விலையில் இருந்து ரூ. 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 103.90-க்கும், ஒரு கிலோ ரூ.1,03,900-க்கும் விற்பனையாகிறது.