பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,996-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ. 63,968-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. இதனால், இல்லலத்ரிஸ்கள் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,340க்கு விற்பனையானது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.58,720க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.7,330 க்கு விற்கப்படுகிறது. மேலும் 1 சவரன் தங்கம் ரூ.80 சரிந்து ரூ.58,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,996-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ. 63,968-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100ஆகவும், 1 கிலோவுக்கு ரூ.2,000 சரிந்து ரூ.1 லட்சமாகவும் விற்கப்படுகிறது