தங்கம் விலை மீண்டும் உயர்வு! 29,000-ஐ நெருங்கியது!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,856-க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.3607-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90க்கு விற்பனையாகிறது.