Gold and Silver Price [file image]
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் சற்று குறைந்து வந்த தங்கம் விலையானது பின் வாரத்தின் இறுதி நாளில் அது உச்சம் கண்டது, தற்போது வாரத்தின் முதல் நாளான இன்று சற்று சரிவை கண்டுள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (17-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ.53,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் ரூ.95.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (16-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.95.60க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…