Today Gold Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.!
அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,570 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77. 700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.