வார இறுதியில் சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!
தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.54,680ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, இறக்குமதி வரி குறைப்பால் ரூ.52,000க்குள் வந்திருக்கிறது. தொடர்ந்து, சவரன் ரூ.50,000க்குள் வரும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (03-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,450க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.90-க்கும், கிலோவிற்கு ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (02-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 6,460-க்கும் விற்பனையானது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ.91-க்கும், கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.