தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை.!
பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
கடந்த 4 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் (20. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,280க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,785க்கு விற்பனை விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் 50 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.77.00க்கும், கிலோவுக்கு வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனையாகிறது.
வேளாண் பட்ஜெட்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்பு…!
சென்னையில் (19. 02. 2024) நேற்றைய நிலவரப்படி,22 கேரட்ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ160 உயர்ந்து ரூ.46,400க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,800க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.