கடலென உயர்வு.. கடுகென குறைவு! தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!!
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சமீப மாதங்களாக இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.55,000ஐ கடந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (18-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,905க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.99.20க்கும், கிலோவிற்கு ரூ.1300 குறைந்து ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (17-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கும், கிராமிற்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,920க்கும் விற்பனை ஆனது. அதே சமயம், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.100.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 அதிகரித்து 1,00,500-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.