சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.3,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.30,560க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.38.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. காலையில் 584 ரூபாய் குறைந்திருந்த நிலையில், தற்போது 984 ரூபாய் குறைந்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்து, தங்க வர்த்தகம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக சரிவை ஈடுகட்ட, சுமார் ரூ.59 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து தங்க வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரண தங்கம் விலை மேலும் குறையலாம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…