தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,111-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.64,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
நேற்று ரூ.59,600க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், ரூ.120 குறைந்து இன்று ரூ.59,480க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,450ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.15 குறைந்து இன்று ரூ.7,435க்கு விற்கப்படுகிறது.
அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,111-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.64,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை இன்று எந்தவித மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.104க்கு விற்பனையாகிறது. 1 கிலோவுக்கு ரூ.1,04,000ஆகவும் விற்கப்படுகிறது.