தொடர்ந்து இரண்டாம் நாளாக சரியும் தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும்குறைந்துள்ளது. தங்கம் வாங்குவதை சீன மத்திய வங்கி நிறுத்தியதே விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (09-07-2024) சென்னையில் நேற்று ரூ.54,400க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.240 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,800ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.30 குறைந்து ரூ.6,770க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.99க்கு விற்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி (08-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.54,400க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம், ரூ.20 குறைந்து, ரூ.6,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.99.50க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.