பட்ஜெட் எதிரொலியால் இரண்டாம் நாளாக தங்கம் விலை குறைவு.!

gold price

தங்கம் விலை : மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 % சதவிகிதத்தில் இருந்து 6 % சதவிகிதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12% சதவிகிதத்தில் இருந்து 6.4 % சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி, நேற்று பட்ஜெட் உரையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், தங்கம் சவரனுக்கு ரூ.2,080ம், கிராமுக்கு ரூ.260ம் குறைந்தது. இதனால் மக்கள் குறிப்பாக இல்லத்தரிசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,920க்கும், கிராமுக்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,490க்கு விற்பனையாகிறது.அதே போல, வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (23-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550 விற்பனையாகிறது. மேலும், ஒரு சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து 52,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல, வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்குக்கு ரூ.3.50 குறைந்து ரூ.88க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident