சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது இந்த வார தொடக்க நாளிலிருந்து தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் வாங்குவதை சீன மத்திய வங்கி நிறுத்தியதே விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (10-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,760க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,080க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல், ஒருகிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.99க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (09-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ரூ.240 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770க்கு விற்கப்படுகிறது. அதே சமயம், வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.99க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…