தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு..!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,904- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்து வருகிறார்கள். ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது.
ஆனால் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ருபாய் குறைந்து கிராமுக்கு 4,738 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.