தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு..!
சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கம் விலை மாற்றம் செய்யப்படாமல் சவரனுக்கு ரூ.36,120 க்கும், கிராமுக்கு ரூ.4,515 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைவை சந்தித்துள்ளது.
அதன்படி சென்னையில், இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,506க்கு இன்று விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், ஆபரண வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.73.90க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது.